Wednesday, November 18, 2015

பிரபஞ்சத்தின் பெரும்பாலான பகுதியில் என்ன உள்ளது என்பது யாருக்கும் தெரியாது!

பிரபஞ்சத்தின் பெரும்பாலான பகுதியில் என்ன உள்ளது என்பது யாருக்கும் தெரியாது! 

ஆம், பிரபஞ்சத்தின் 96 சதவிகிதம் ஆனது மனிதர்களால் கண்டறிய முடியாத இருண்ட விஷயம் (டார்க் மேட்டர்) மற்றும் இருண்ட ஆற்றலால் நிரம்பி உள்ளது. இந்த பொருள்களை உருவாக்கும் துகள்கள் ஆனது வழக்கமான விண்வெளி விடயங்கள் அல்லது ஒளியுடன் தொடர்பு கொள்ளாது என்பதால், அவைகள் என்னவென்று கண்டுபிடிக்கவே முடியவில்லை

ஆண்களை விட பெண்களால் அதிக நிறங்களை காண முடியும்!

ஆண்களை விட பெண்களால் அதிக நிறங்களை காண முடியும்! 

வண்ணங்களை வகைப்படுத்தி காணும் திறன் ஆனது மரபணுக்கள் எக்ஸ் குரோமோசோமில் காணப்படுகின்றன. இவ்வகை எக்ஸ் குரோமோசோம்கள் ஆனது பெண்களுக்கு இரண்டும், ஆண்களுக்கு ஒன்றும் இருக்கிறது. ஆக பெண்களால் ஆண்களை விட அதிக அளவில் வண்ணங்களை பிரித்து பார்க்க முடியும்.

உங்கள் உடலின் பாதி பங்கை பாக்டீரியாக்கள் ஆளுகிறது!

உங்கள் உடலின் பாதி பங்கை பாக்டீரியாக்கள் ஆளுகிறது! 

ஆம் மனித உடலில் 39 டிரில்லியன் பாக்டீரியாக்கள் மற்றும் 30 டிரில்லியன் மனித உயிரணுக்கள் இருப்பதாக கடந்த 2014 ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்விற்கு முன்னர், மனித உடலின் 10: 1 என்ற விகிதத்தில் தான் பாக்டீரியாக்கள் இருந்தன என்று நம்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Image result for bacteria

விண்வெளியில் ஏப்பம் விட முடியாது!

விண்வெளியில் ஏப்பம் விட முடியாது! 

நீங்கள் சாப்பிடுகிற உணவிலிருந்து திடப்பொருட்களையும், திரவத்தையும் ஈர்த்து விட்ட பிறகு, வாயு மட்டுமே வாயிலிருந்து தப்பித்துக் கொள்ளும், அதுதான் ஏப்பம் ஆகும், இது பூமியில் சாத்தியமாகும். ஆனால் புவியீர்ப்பு இல்லாத விண்வெளி பகுதிகளில், திரவங்கள் மற்றும் திடப்பொருட்களிலிருந்து வாயுவை பிரிக்க முடியாது, எனவே அது வாந்தியாக மாறிவிடும்.

15. விண்வெளியில் ஏப்பம் விட முடியாது!

சூரிய வெடிப்பு (அல்லது எரிப்பு) மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கிறது!

சூரிய வெடிப்பு (அல்லது எரிப்பு) மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கிறது! 

சூரியனில் வெடிப்பு ஏற்படும் போது கிளம்பும் வெப்ப ஆற்றலை தான் சோலார் ஃபிளேர் என்பார்கள். அந்த ஆற்றலானது 100 மெகாடன் அணு குண்டுகளை ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறுவதற்கு சமமாகும். இந்த கொடூரமான கதிர்வீச்சு ஆபத்தில் இருந்து நம்மை பாதுகாக்கும் பூமியின் வளிமண்டலத்திற்கு கோடான கோடி நன்றிகள்!


15. விண்வெளியில் ஏப்பம் விட முடியாது!

ஹீலியமும் புவியீர்ப்புக்கு எதிராகவும் செயல்பட முடியும்

ஹீலியமும் புவியீர்ப்புக்கு எதிராகவும் செயல்பட முடியும் 

தீவிர வெப்பநிலைக்கு பிறகு ஹீலியம் ஆனது ஒரு சூப்பர்ஃப்ளூயிட் ஆக மாறும். அந்த நிலையில் ஹீலியத்தால் புவியீர்ப்புக்கு எதிராக செயல்பட முடியும்!

Image result for helium

பாலூட்டி வகையில் ஒரே ஒரு ஜீவனுக்கு தான் இறக்கைகள் உள்ளன!

பாலூட்டி வகையில் ஒரே ஒரு ஜீவனுக்கு தான் இறக்கைகள் உள்ளன! 

அது வெளவால்கள் ஆகும். மரத்திற்கு மரம் பறக்கும் அணில் வகைகளையும் இந்த பட்டியலின் கீழ் இணைக்கலாமே என்று நீங்கள் கோரிக்கை வைத்தால், மன்னிக்கவும், அவைகள் குதிக்கின்றன பறக்கவில்லை. ஆகவே வெளவால்கள் மட்டுமே இந்த போட்டியில் வெற்றி அடைகின்றன.
12. பாலூட்டி வகையில் ஒரே ஒரு ஜீவனுக்கு தான் இறக்கைகள் உள்ளன!

நீரால் ஒரே நேரத்தில் மூன்று நிலைகளாகவும் (ஸ்டேட்ஸ்) இருக்க முடியும்!

நீரால் ஒரே நேரத்தில் மூன்று நிலைகளாகவும் (ஸ்டேட்ஸ்) இருக்க முடியும்!  

இது ட்ரிபிள் பாயில் என்று அழைக்கப்படுகிறது. இந்த விளைவின் கீழ் உள்ள வெப்பநிலையில், தண்ணீர் ஒரு வாயுவாக, ஒரு திரவமாக மற்றும் அதே நேரத்தில் திடமாகவும் இருக்கும். இதை அடைவதற்கு மிகவும் குறிப்பிட்ட நிலைமைகள் தேவை. குறிப்பாக இதை வீட்டில் முயற்சி செய்யக்கூடாது, முடியாது.

11. நீரால் ஒரே நேரத்தில் மூன்று நிலைகளாகவும் (ஸ்டேட்ஸ்) இருக்க முடியும்!

உங்களால் பந்துகளை பறக்க வைக்க முடியும்!



உங்களால் பந்துகளை பறக்க வைக்க முடியும்! 

நீங்கள் சுழற்றிக்கொண்டே ஒரு பந்தை 
Image result for ball tennis
கைவிடும்போது, பலத்த காற்று வீசும் பட்சத்தில் அது பறந்து போகும் என்கிறது அறிவியல். இதை மேக்னஸ் விளைவு என்று அழைகிறார்கள். இந்த விளைவு தான் டென்னிஸ் மற்றும் கால்பந்து விளையாட்டை ஒரு தந்திரமான மற்றும் எளிமையான விளையாட்டாக மாற்றுகிறது.

மற்ற கிரகங்களில் வைர மழை பெய்யும்!

மற்ற கிரகங்களில் வைர மழை பெய்யும்! 

ஆம், நீங்கள் சரியாக தான் படித்து உள்ளீர்கள். நெப்டியூன், யுரேனஸ், ஜுப்பிடர் மற்றும் சனி ஆகிய கிரகங்கள் வைரங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த நான்கு கிரகங்களிலும் உள்ள வளிமண்டலங்கள் கார்பன் அணுக்கள் இருப்பதால், தீவிரமான அழுத்தத்தின் கீழ் அவை வைரங்களாக மாறுகின்றன. குறிப்பாக நெப்டியூன் மற்றும் யுரேனஸில் இந்த வைர மழை நிகழ்வது - ஆய்வக நிலைமைகளின் வழியாக - நிரூபணம் ஆகியுள்ளது. சனி கிரகத்தை பொறுத்தமட்டில், ஆண்டுக்கு சுமார் 2.2 மில்லியன் பவுண்டுகள் எடை அளவில் வைரங்கள் மழையாக பெய்யும் என்று ஊகிக்கப்பட்டுள்ளது.
09. மற்ற கிரகங்களில் வைர மழை பெய்யும்!

ஆனால் கவலை வேண்டாம் - நமக்கு நிறைய டி.என்.ஏ உள்ளது!

மனிதர்கள் பூஞ்சைக்குத் தொடர்புடையவர்கள் ஆனால் கவலை வேண்டாம் - நமக்கு நிறைய டி.என்.ஏ உள்ளது!

மனித மரபணுக்களில் உள்ள டி.என்.ஏ வின் எண்ணிக்கை ஆனது சுமார் 3 பில்லியன் அடிப்படை ஜோடிகளும், சுமார் 25,000 மரபணுக்களும் (ஜீன்ஸ்) உள்ளன என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். மனித உடலின் 10 டிரில்லியன் செல்களிலும் அந்த மரபணுவின் முழு நகல் காணப்படுகிறதாம், அந்த டி.என்.ஏ எல்லாவற்றையும் வரிசைப்படுத்தினால், அது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள தூரத்தை விட 100 மடங்கு அதிகமாக நீளுமாம்.

மனிதர்கள் பூஞ்சைக்குத் தொடர்புடையவர்கள்

மனிதர்கள் பூஞ்சைக்குத் தொடர்புடையவர்கள்  

கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் மூலம், கடந்த 2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின் படி, தாவரங்கள் இருந்து வந்த மரபணுக்களின் வழியாக மனிதகுலம் உருவாகியிருக்கலாம் என்று கண்டு அறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வானது, சுமார் 1 சதவிகிதம் மனித மரபணுக்கள் ஆனது தாவரங்களில் இருந்து பெறப்பட்டு உள்ளது என்கிறது.

08. ஆனால் கவலை வேண்டாம் - நமக்கு நிறைய டி.என்.ஏ உள்ளது!

குளிர் தண்ணீர் சூடான நீரை விட விரைவாக வெப்பப்படுத்துகிறது!

குளிர் தண்ணீர் சூடான நீரை விட விரைவாக வெப்பப்படுத்துகிறது!

பெம்பா விளைவுக்கான காரணத்தை ஆராயும் ஆராய்ச்சியாளர்கள் இந்த கண்டுபிடிப்பையும் ஆராய்ந்து உறுதி படுத்தினார்கள். கூடுதல் சுவாரசியம் என்னவெனில் இதற்கு இன்வெர்ஸ் பெம்பா விளைவு, அதாவது தலைகீழ் பெம்பா விளைவு என்று பெயர் சூட்டி உள்ளனர்.

07. மனிதர்கள் பூஞ்சைக்குத் தொடர்புடையவர்கள்

குளிர்ந்த தண்ணீரைவிட ஹாட் நீரை வேகமாக உறைகிறது!

குளிர்ந்த தண்ணீரைவிட ஹாட் நீரை வேகமாக உறைகிறது!  

இந்த உண்மை முரண்பாடாகத் தோன்றலாம். இது பெம்பா விளைவு என்று அழைக்கப்படுகிறது. அதாவது இதை கண்டு அறிந்த, டான்சானிய மாணவர் எராஸ்டோ பெம்பாவின் பெயரை குறிப்பிடுகிறது. "நீர் துகள்களின் வேகத்தொகை ஆனது குறிப்பிட்ட சூழலைக் கொண்டிருக்கும்போது, ​​அவை சூடாக இருக்கும்போது இன்னும் உடனடியாக நிறுத்தப்படலாம்" என்பது இதன் விளக்கம்.
Image result for hot water into ice

வாழைப்பழத்தில் கதிரியக்கம் உள்ளது!


Image result for banana

வாழைப்பழத்தில் கதிரியக்கம் உள்ளது!  

இது நம்மிடம் மறைக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகளில் ஒன்றாகும். வாழைப்பழங்களில் பொட்டாசியம் உள்ளது என்பதை அறிந்த நமக்கு, அதன் பொட்டாசியம் சிதைவு அடையும் பொபோது அவைகள் சற்றே கதிரியக்கத்தை உருவாக்குகின்றன என்பது தெரிந்து இருக்க வாய்ப்பே இல்லை. இதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. கதிர்வீச்சு விஷத்தை உட்கொள்ள ஒரே நேரத்தில் நீங்கள் 10,000,000 வாழைப்பழங்களை சாப்பிட வேண்டும். (ஆதாரம் : ஃபோர்ப்ஸ் அறிக்கைகள்)


பீரியாடிக் டேபிளில் ஒரே ஒரு ஆங்கில எழுத்து மட்டும் இருக்காது!

அது 'ஜே' ஆகும். நம்பிக்கை இல்லை என்றால் இப்பதே கெமிஸ்ட்ரி புக்கை எடுத்து ஒருமுறை பரிசோதனை செய்து பார்த்து விட்டு வாருங்கள். நீங்கள் அடுத்த உண்மையை பற்றி அறிந்துகொள்ளும் வரை நாங்கள் காத்திருக்கிறோம்.

Image result for periodic table

ஆக்ஸிஜனுக்கு நிறம் உண்டு!

ஆக்ஸிஜனுக்கு நிறம் உண்டு! 

ஒரு வாயுவாக, ஆக்சிஜனுக்கு மனமும் கிடையாது, நிறமும் கிடையாது. ஆனால் அதன் திரவ மற்றும் திட வடிவங்களில், இது வெளிர் நீல நிறமாக இருக்கிறது.

Image result for oxygen

விண்வெளியில் உள்ள நட்சத்திரங்களை விட பூமியில் அதிக மரங்கள் உள்ளன!


விண்வெளியில் உள்ள நட்சத்திரங்களை விட பூமியில் அதிக மரங்கள் உள்ளன!  
நாசா வல்லுநர்களின்படி, நமது பால்வெளி மண்டலத்தில் 100 பில்லியன் முதல் 400 பில்லியன் நட்சத்திரங்கள் வரை எங்கும் இருக்க முடியும். மறுகையில், 2015 ஆம் ஆண்டில் வெளியோடப்பட்ட நேச்சர் பத்திரிகை ஆய்வு அறிக்கையின் படி உலகெங்கிலும் உள்ள மரங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது 3.04 டிரில்லியன் மரங்கள் உள்ளன.

Image result for star

science-facts-you-never-learned-school


சயின்ஸ் டீச்சருக்கு கூட தெரியாத 18 அறிவியல் உண்மைகள்!


  1.  விண்வெளியில் உள்ள நட்சத்திரங்களை விட பூமியில் அதிக மரங்கள் உள்ளன! 
  2. ஆக்ஸிஜனுக்கு நிறம் உண்டு!
  3. பீரியாடிக் டேபிளில் ஒரே ஒரு ஆங்கில எழுத்து மட்டும் இருக்காது!
  4. வாழைப்பழத்தில் கதிரியக்கம் உள்ளது!
  5. குளிர்ந்த தண்ணீரைவிட ஹாட் நீரை வேகமாக உறைகிறது!
  6. குளிர் தண்ணீர் சூடான நீரை விட விரைவாக வெப்பப்படுத்துகிறது!
  7. மனிதர்கள் பூஞ்சைக்குத் தொடர்புடையவர்கள்
  8. ஆனால் கவலை வேண்டாம் - நமக்கு நிறைய டி.என்.ஏ உள்ளது!
  9. மற்ற கிரகங்களில் வைர மழை பெய்யும்!
  10. உங்களால் பந்துகளை பறக்க வைக்க முடியும்!
  11. நீரால் ஒரே நேரத்தில் மூன்று நிலைகளாகவும் (ஸ்டேட்ஸ்) இருக்க முடியும்!
  12. பாலூட்டி வகையில் ஒரே ஒரு ஜீவனுக்கு தான் இறக்கைகள் உள்ளன!
  13. ஹீலியமும் புவியீர்ப்புக்கு எதிராகவும் செயல்பட முடியும்
  14. சூரிய வெடிப்பு (அல்லது எரிப்பு) மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கிறது!
  15. விண்வெளியில் ஏப்பம் விட முடியாது!
  16. உங்கள் உடலின் பாதி பங்கை பாக்டீரியாக்கள் ஆளுகிறது!
  17. ஆண்களை விட பெண்களால் அதிக நிறங்களை காண முடியும்!
  18. பிரபஞ்சத்தின் பெரும்பாலான பகுதியில் என்ன உள்ளது என்பது யாருக்கும் தெரியாது!