Saturday, November 17, 2018

VM WARE Creation In Windows10

இந்த பணி மிகவும் நேரடியானது மற்றும் எளிதானது. உங்கள் சாதனத்தில் உள்ள எந்த ஒரு OS விரிச்சுவல் சூழ்நிலையை இந்த அதிகாரப்பூர்வமான கருவியை பயன்படுத்தி உருவாக்க முடியும். எனவே இங்கே உள்ள எளிய படிகளை பயன்படுத்தி, ஒரு விரிச்சுவல் மிஷனை உருவாக்குவது எப்படி என்று அறியலாம்.



விண்டோஸ் 10 இல் விரிச்சுவல் மிஷினை உருவாக்குவது எப்படி?

விண்டோஸ் 10 இல் ஒரு விரிச்சுவல் மிஷனை உருவாக்கும் படிகள்:
முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!



  படி 1:

படி 1:

படி 1: உங்கள் விண்டோஸ் 10 கம்ப்யூட்டரில் முதல் பணியாக, Win+R பட்டனை அழுத்தி ரன் டயலாக் பாக்ஸை நீங்கள் திறக்க வேண்டும். அதற்கு பிறகு, "optionalfeatures.exe" உள்ளீட வேண்டும்.
படி 2: இப்போது நீங்கள் விண்டோஸ் அம்சங்களை ஆன் மற்றும் ஆப் செய்ய உதவும் மேனுவை அங்கே காணலாம். உங்கள் விண்டோஸ் 10 இல் இந்த கருவியை செயல்பட செய்ய ஹைப்பர்-வி என்ற தேர்வை டிக் செய்ய வேண்டும்.



படி 3:

படி 3:

படி 3: இப்போது அந்த அம்சம் ஆக்டிவேட் ஆகிவிடும் என்பதால், உங்கள் கம்ப்யூட்டரை நீங்கள் ரீஸ்டார்ட் செய்து, கம்ப்யூட்டரில் செய்யப்பட்ட மாற்றங்களை செயல்பாட்டில் கொண்டு வர முடியும்.
படி 4: உங்கள் கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஆன பிறகு, உங்கள் கீபோர்ட்டில் உள்ள விண்டோஸ் பட்டனை அழுத்தி, அதில் ஹைப்பர்-வி என்று தட்டச்சு செய்யவும். பிறகு அங்கு வரும் ஹைப்பர்-வி மேனேஜர் என்பதை கிளிக் செய்யவும்.



படி 5:

படி 5:

அக்ஷனுக்கு கீழே உள்ள இப்போது காட்டப்படும் விரிச்சுவல் சுவிட்ச் மேனேஜர் தேர்வு மீது கிளிக் செய்யவும்.



படி 6:

படி 6:

அங்கே இருக்கு எக்டேர்னல் தேர்வை தேர்ந்தெடுந்து, அதில் விரிச்சுவல் சுவிட்ச்சை உருவாக்கு என்ற தேர்வை தேர்ந்தெடுக்கவும். அதன்பிறகு கீழே நாங்கள் அளித்துள்ள ஸ்கிரீன்சார்ட்டில் உள்ள விவரங்களையும் அமைப்புகளையும் அப்படியே உள்ளிட வேண்டும். இதன்மூலம் நீங்கள் அளிக்கும் பெயரில் விரிச்சுவல் ஓஎஸ் உருவாக்க உதவியாக இருக்கும்.



படி 7:

படி 7:

இப்போது தோன்றும் பிழை செய்தியில் (எரர் மெசேஜ்) காட்டப்படும் ஓகே என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.



படி 8:

படி 8:

இப்போது நியூ -> விரிச்சுவல் மிஷன் என்பதன் மீது கிளிக் செய்து, துவக்கத்தில் உங்கள் சாதனத்தில் விரிச்சுவல் மிஷனை நீங்கள் செட்அப் செய்ய வேண்டும்.



படி 9:

படி 9:

இப்போது காட்டப்படும் பகுதியில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எல்லா தேர்வுகளையும் அமைத்து விட்டு, அடுத்தது என்பதன் மீது கிளிக் செய்ய வேண்டும். இப்போது இந்த நிறுவுதல் தேர்வின் கீழ், பூட் செய்யப்படும் இமேஜ் பைல்லில் இருந்து ஒரு ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை நிறுவுவதற்கான தேர்வை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும் எந்த ஓஎஸ்-க்காக விரிச்சுவலை உருவாக்க வேண்டுமோ, அதற்கான ISO கோப்பு தேர்ந்தெடுக்க வேண்டும்.
மேற்கண்ட எளிய படிகளின் மூலம் விண்டோஸ் 10 இல் ஒரு விரிச்சுவல் மிஷினை எப்படி உருவாக்குவது என்பதை பார்த்தோம். இந்த முறையைப் பயன்படுத்தி, ஏதாவது மூன்றாவது நபரின் கருவியின் உதவி இல்லாமல், உங்கள் விண்டோஸ் 10 இல் விரிச்சுவல் மிஷனை துரிதமாகவும் எளிதாகவும் உருவாக்க முடியும். இதே கருுவியை பயன்படுத்தி, லினிக்ஸ் விரிச்சுவல் மிஷன் உருவாக்க கூட பயன்படுத்த முடியும்.



No comments:

Post a Comment